giriblog

அதானி எதனால் குறி வைக்கப்படுகிறார்?
அதானி தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். எதனால் அதானி குறி வைக்கப்படுகிறார் என்பதைப்பார்ப்போம்.

அதானி

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதானி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. Image Credit

அதோடு ஒப்பந்தங்களைக் கைப்பற்றுகிறார் என்பதும்.

உள்நாட்டில் இது போன்ற விமர்சனங்கள் என்றால், வெளிநாடுகளில் ஜார்ஜ் சோரோஸ் தொடர்ச்சியாக அதானி மீது தாக்குதலை நடத்தி வருகிறார்.

இக்கட்டுரை அதானி நல்லவர் வல்லவர் என்று கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல, மாறாக எதனால் குறி வைக்கப்படுகிறார் என்பதைப் பற்றி.

வெளிநாட்டு அரசியல்

சில செயல்களை இந்திய அரசாங்கம் நேரடியாகச் செய்ய முடியாது மாறாக ஏதாவது இந்திய தனியார் அமைப்பு, நிறுவனம் மூலம் செயல்படுத்தும்.

அவ்வாறு செயல்படுத்தும் அமைப்புகளில், நிறுவனங்களில் முக்கியமானதாக உள்ளதே அதானி நிறுவனம்.

உலகளவில் துறைமுகத்தை எந்த நாடு அதிகளவில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோ அவர்களே சரக்கு போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

அரசு மாறினால் துறைமுக நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் ஆனால், தனியார் என்றால் அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் காரணம், அவர்களின் முதலீடு.

துறைமுகம்

இந்தியாவும், சீனாவும் துறைமுகக் கட்டுப்பாட்டில் போட்டிப்போடுகின்றன. சீனா இவ்வாறான போட்டியில் கைப்பற்றியது தான் இலங்கையின் அம்பன் தோட்டா துறைமுகம்.

இத்துறைமுகம் சீனா கைக்குச் சென்றதன் மூலம் இந்தியாக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது.

ஷேக் ஹசீனா ஆட்சியில் இந்தியாக்கு கிடைத்து இருக்க வேண்டிய பங்களாதேஷ் துறைமுகக் கட்டுப்பாடு, ஆட்சி மாற்றத்தில் கைநழுவிப்போனது.

தற்போது புரிந்து இருக்கும், எதனால் பங்களாதேஷ் அரசியலில் அமெரிக்கா, சீனா தலையிடுகிறது என்று.

இது போன்று தான் உலகம் முழுக்க உள்ள துறைமுகங்கள் கட்டுப்பாடும்.

அரசாங்கம் செய்ய முடியாது

சில விஷயங்களை அரசாங்கம் நேரடியாக இறங்கிச் செய்ய முடியாத போது, அரசின் மறைமுக ஆதரவுடன் அதானி போன்ற நிறுவனங்கள் செயல்படும்.

இதற்கு அரசாங்கம் அவர்களுக்குச் சலுகைகளைக் கொடுக்கும்.

கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு நெருக்கடி ஏராளமாக வந்தது. அங்குள்ள அமைப்புகள், கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தள்ளிச்சென்றாலும், மாநில அரசின் ஒத்துழைப்பால் துறைமுகம் கட்டப்பட்டு, இன்று அதிகக் கொள்ளளவு கொண்ட கப்பல்களின் சரக்கு போக்குவரத்தைக் கையாள்கிறது.

இத்துறைமுகம் இந்தியாக்கு செய்து வரும் உதவியின் முக்கியத்துவம் வெளிநாட்டு அரசியல் புரிந்தாலே புரியும்.

இவ்வாறு அதானியின் துறைமுகம், விமான நிலையம் மற்றும் சோலார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன.

ஏன் குறி வைக்கப்படுகிறது?

இந்தியாவைப் பொருளாதாரத்தில் கீழிறக்க வேண்டும் என்றால், அதானி, அம்பானி மற்றும் SBI வங்கியை ஒழித்துக்கட்ட வேண்டும்.

அம்பானி Oil Refinery யில் மிகப்பெரிய அளவில் செயல்படுகிறார்.

ரஷ்யாவில் வாங்க மாட்டேன் என்று கூறும் ஐரோப்பா நாடுகளுக்கு, ரஷ்யா கச்சா எண்ணெயை வாங்கி, அதைத் திரும்ப ஐரோப்பாவுக்கே விற்று வருகிறார்.

இந்திய அரசின் செயல்பாடுகளில் வங்கித்துறையில் SBI மிகமுக்கியப்பங்கை ஆற்றுகிறது.

இவர்கள் மூவரும் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

எதனால் அதானி?

அம்பானி இந்தியாவில் மட்டுமே பெரியளவில் செயல்பட்டு வருகிறார், வெளிநாடுகளில் இவரது முதலீடுகள் இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவில் இல்லை.

ஆனால், அதானி அப்படியில்லை.

இவரின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவை அழிக்க நினைக்கும் ஜார்ஜ் சோரோஸுக்கு கடுப்பாக உள்ளது.

இந்தியாவின் துறைமுக வலிமை குறிப்பாகச் சரக்கு போக்குவரத்தில் இந்தியா கட்டுப்பாட்டை எடுக்க மறைமுகமாக அதானி உதவி வருகிறார்.

ஜார்ஜ் சோரஸ்

எனவே தான் ஜார்ஜ் சோரோஸ்  தொடர்ந்து, அதானியை தாக்கி வருகிறார். அவர்களின் Hindenburg நிறுவனமே ஒரு பிராடு நிறுவனம், இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள்.

ஆனால், அப்போதைக்குப் பலனளித்தாலும் அதானியின் பங்குகள் மீண்டு வந்து விட்டன. இதன் பிறகு இரு முறை இதே போலக் குற்றச்சாட்டை வைத்தார்கள்.

இவர்கள் பொய்யாகப் பேசுகிறார்கள், குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்று, அதன் பிறகான குற்றச்சாட்டுகளை மக்கள் கண்டுகொள்ளவில்லை.

அதானியோடு SBI வங்கியையும் சேர்த்து குறி வைத்தார்கள் ஆனால், அதானியின் நிறுவனத்தில் 1% பங்கு மட்டுமே SBI வைத்து இருந்தது.

எனவே, எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை, ‘எங்களின் இலாபத்தில் குறைந்ததே தவிர நட்டமில்லை‘ என்று SBI வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

குறைந்த கொஞ்சமும் அதானியின் பங்குகள் மீண்டெழுந்த போது சரியாகி விட்டது.

தமிழகம்

கேரளாவில் எதிர்ப்பு தெரிவித்த கும்பல் போன்றே பலரும் சேர்ந்து தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததாகக் குற்றச்சாட்டுள்ளது.

இந்த ஆலை மூடப்பட்டதால், தாமிரத்துக்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையானதால், இந்தியாக்கு அதிகளவில் செலவு அதிகரித்துள்ளது.

உங்களில் பலருக்கும் தோன்றியிருக்கும். ‘தமிழகத்தில் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் துவங்க வேண்டியது தானே!‘ என்று.

நானும் நினைத்தேன் ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு குஜராத்தில் மிகப்பெரிய தாமிர ஆலையை அதானி துவங்கி விட்டார்.

இதே போன்று கன்னியாகுமரியில் துறைமுகத்துக்கான எதிர்ப்பாலே தமிழகத்துக்கு வர வேண்டிய துறைமுக வாய்ப்பு கேரளா விழிஞ்சத்துக்கு சென்று விட்டது.

தற்போது மாநிலத்தையும், நாட்டையும் நாசமாக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாம்சங் தொழிற்சாலையில் போராட்டம் செய்து பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றன.

கம்யூனிஸ்ட் ஒழிந்தாலே மாநிலமும், நாடும் வளர்ச்சி பெறும்.

சர்வதேச அரசியல்

இங்கே அமர்ந்து கொண்டு ‘ஏய் அதானி!‘ ன்னு குரல் கொடுப்பவர்களுக்கு சர்வதேச அரசியலும் புரியாது, இதில் நடக்கும் அரசியலும் தெரியாது.

அதானியை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ், மமதா ஆட்சியில் அதானியின் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல், அரசியல் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறார்கள்.

அதானி மட்டுமல்ல அனைவருமே ஏதாவது ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டே செயல்படுகின்றனர் பலரும் மதிக்கும் டாடா உட்பட.

இங்கே உள்ள சன் டிவி பலரை அழித்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலே வரவில்லையா?! அதற்கு ஏன் யாருக்கும் கோபம் வரவில்லை?!

ஜார்ஜ் சோரோஸ், அமெரிக்கா மற்றும் சீனா கொடுக்கும் பணத்துக்காக இங்கே உள்ள அமைப்புகள் இந்திய நிறுவனங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இங்கே அனைத்திலும் அரசியல் உள்ளது, அதில் ஒன்று அதானி அரசியல்.

The post அதானி எதனால் குறி வைக்கப்படுகிறார்? appeared first on giriblog.

Kill (2024 Hindi) | A Deadly Fight
இந்தியாவில் பல்வேறு வன்முறைப்படங்கள் வந்து இருந்தாலும், Kill போன்ற படங்கள் வந்தது குறைவு. Image Credit

Kill

இராணுவத்தில் பணியில் இருப்பார் லக்ஷ்யா.

காதலி தான்யாக்கு திருமணம் முடிவாகி விடுகிறது, அனைவரும் ராஞ்சியிலிருந்து டெல்லி செல்லும் அதி விரைவு ரயிலில் பயணிக்கிறார்கள்.

அதே ரயிலில் லக்ஷ்யாவும் பயணித்துத் தன்யாவை சந்திக்கும் வேளையில், ஆஷிஷ் வித்தியார்த்தி தலைமையில் ரயில் கொள்ளைக் கூட்டம் ரயிலில் நுழைகிறது.

கொள்ளையோடு கொலையும் நடக்க இறுதியில் என்ன ஆனது என்பதே Kill.

ரயில்

இப்படம் பார்க்க இரு காரணங்கள், ஒன்று எனக்கு ரயில் பிடிக்கும். இன்னொன்று இந்தப்படத்தில் உள்ள ஆங்கிலப்படங்களைப் போன்ற சண்டைக்காட்சிகள்.

சண்டைக்காட்சிகள் என்றால் ஹாரர் படம் போல ரத்தக்களரியான சண்டை.

இது போன்ற காட்சிகளை இந்தியப்படங்களில் பார்ப்பது இதுவே முதல் முறை. வழக்கமாக ஓரிரு நபர்களோடு முடிந்து விடும் ஆனால், இதில் 40+ நபர்கள்.

எனவே, படம் நெடுக வெட்டு, குத்து என்று ரணகளமாக உள்ளது.

ஒரே இரவில் நடக்கும் கதை.

திரைக்கதை

எதிர்பார்த்தது போலச் சண்டைக்காட்சிகள் அதிரடியாக இருந்தது ஆனால், சில கேள்விகளும் உள்ளது.

தன்யாவின் அப்பா பெரிய தொழிலதிபர் ஆனால், இவர்கள் இருவரும் காதலிப்பது தெரியாது. எதனால் கூறவில்லை என்பதற்கு உறுதியான காரணமாக இல்லை.

லக்ஷ்யா அதிரடியாகச் சண்டை போடுகிறார் ஆனால், முகம் அமுல் பேபி போல இருப்பது சண்டைகளுக்கும், முகபாவனைகளுக்கும் சற்று பொருத்தமாக இல்லை.

தன்யா பாதிக்கப்பட்டதால் கோபமாகும் லக்ஷ்யா வெறிகொண்டு எல்லோரையும் போட்டுத்தள்ளுகிறார்.

இந்த இடத்தில் ஆஷிஷ் வித்தியார்த்தி பயந்து விடுவதோடு உடன் வந்தவர்களும் பயந்து விடுவதால், வில்லனுக்கு உண்டான கெத்து போய் விடுகிறது.

இதை ஈடுகட்ட ராகவ் என்ற முக்கிய வில்லன் லக்ஷ்யா க்கு பெரிய சவாலாக உள்ளார். அவர் லக்ஷ்யாவை குறைத்து மதிப்பிடும் காட்சிகளில் பிரச்சனை அதிகமாகிறது.

அலட்டிக்கொள்ளாமல் ஆனால், ஆபத்தான நபராக படம் முழுக்க வருகிறார்.

ஒளிப்பதிவு பின்னணி இசை

இப்படத்தில் அதிக வேலை இருந்தது ஒளிப்பதிவு குழுவினருக்குத் தான். குறுகிய இடத்தில் அனைத்தையும் படமாக்க வேண்டும்.

நெருக்கடியான இடத்தில் சண்டைக்காட்சிகளைப் படம் முழுக்க அமைப்பது சவாலான வேலையாக இருக்கும்.

பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதும் கூடுதல் நெருக்கடி.

சிறிய இடத்தில் படம் முழுக்க கேமராவை தூக்கிக்கொண்டு காட்சியமைத்து, ரயில் மேலே ஓடி அதையும் படமாக்கி என்று கடுமையான பணியே.

பின்னணி இசை பரபரப்பான காட்சிக்கு ஏற்றவாறு உள்ளது.

யார் பார்க்கலாம்?

அதிரடி ஹாரர் சண்டைக் காட்சிகளைப் பார்க்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் காணலாம். மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறான படங்களில் ஆர்வமில்லாதவர்கள் படம் பார்த்து ‘என்னப்பா இது! ஒரே வன்முறையா இருக்குன்னு சொல்லாதீங்க‘  .

பாலியல் ரீதியான காட்சிகள் இல்லை.

Disney+ Hotstar ல் காணலாம்.

Directed by Nikhil Nagesh Bhat
Screenplay by Ayesha Syed, Nikhil Nagesh Bhat
Story by Nikhil Nagesh Bhat
Produced by Karan Johar, Guneet Monga, Apoorva Mehta, Achin Jain
Starring Lakshya, Raghav Juyal, Ashish Vidyarthi, Abhishek Chauhan, Tanya Maniktala
Cinematography Rafey Mehmood
Edited by Shivkumar V. Panicker
Music by
Score: Ketan Sodha
Songs: Vikram Montrose, Shashwat Sachdev, Haroon-Gavin
Release dates 7 September 2023 (TIFF), 5 July 2024 (India)
Running time 105 minutes
Country India
Language Hindi

The post Kill (2024 Hindi) | A Deadly Fight appeared first on giriblog.

லப்பர் பந்து (2024) | மாமா Vs மாப்பிள்ளை
காதலையும் கிரிக்கெட்டையும் மையமாக வைத்து வந்துள்ள படமே லப்பர் பந்து.

லப்பர் பந்து

தினேஷ் பல காலமாக கிரிக்கெட் விளையாடுபவர், அவரின் குறை தெரிந்து அவரை ஆட்டமிழக்கச் செய்த ஹரிஷ் கல்யாணோடு சண்டையாகிறது. Image Credit

ஹரிஷ் கல்யாண் காதலிக்கும் பெண், தினேஷ் மகள் என்றதும் மேலும் சிக்கலாகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதைச் சுவாரசியமாகக் கூறியதே லப்பர் பந்து.

நடிகர்கள் தேர்வு

இது போன்ற நடுத்தர வயது கதாப்பாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இதுவே ரொம்ப படங்களுக்குப் பிறகு இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்துள்ளது.

தினேஷ் மனைவியாக வரும் ஸ்வாசிகா கோபமான மற்றும் முரட்டு பெண்ணாக நடித்துள்ளார், இயல்பாக இல்லை, வலிந்து திணிக்கப்பட்ட நடிப்பாக இருந்தது.

அதற்கு அந்தக்கதாபாத்திரத்துக்கு உண்டான தோற்றம் இல்லாதது காரணமாக இருக்கலாம். அதோடு இருவரது வயதும் குறைவு ஆனால், நடுத்தர வயது கதை.

ஹரிஷ் கல்யாண் பக்காவான தேர்வு, இவருடைய இயல்பான நடிப்பு பொறியாளன் படத்திலிருந்து ரொம்பப்பிடிக்கும். நடுத்தரக் குடும்பத்துப் பையன் போன்ற தோற்றம்.

நாயகி சஞ்சனாவை எங்கேயோ பார்த்த மாதிரியே உள்ளதே என்று யோசித்துக்கொண்டே இருந்து, பின்னர் நடிகை ஸ்வர்ணமால்யா போல இருக்கிறார் என்று நினைவுக்கு வந்தது  .

ஹரிஷ் கல்யாண் நண்பராக வரும் பாலா இது போன்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகச் செய்வார், அதே போல தினேஷ் நண்பராக வருபவரும் ஆகச்சிறந்த நடிப்பு.

குறிப்பாக தினேஷ் இறுதியில் சரியாக விளையாடாமல் பின்னர் அதிரடியாக ஆடும் போது அவரின் முகத்தில் தெரியும் பெருமை, நடிப்பு போலவே இல்லை.

ஈகோ & சாதி

கதையின் மையமே பார்க்கிங் படம் போல ஈகோ தான். இதோடு சாதிப்பிரச்சினையால் ஏற்படும் புறக்கணிப்பைக் கூறியுள்ளார் இயக்குநர்.

ரஞ்சித், மாரி கூறுவதையே லப்பர் பந்து இயக்குநரும் கூறியுள்ளார் ஆனால், நேர்மறையாக, கதையின் போக்கில், திணிக்காமல் கூறியுள்ளார்.

ரஞ்சித், மாரி இருவரும் படம் பார்ப்பவர்களிடையே வெறுப்புணர்வை, எதிர்மறை எண்ணங்களை, சண்டையைக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால், இதில் யாருக்குமே வெறுப்புணர்வு தோன்ற வைக்காமல் அதே சமயம் சொல்ல வந்த கருத்தையும் கூறி இருக்கிறார் இயக்குநர்.

சாதியோடு பெண் சுதந்திரம், முக்கியத்துவத்தையும் கொண்டு வந்துள்ளார் ஆனால், இது அனைத்துமே கதையோட்டத்தில் இயல்பாகச் செல்கிறது.

ஈகோ, கோபம், நகைச்சுவை, பரபரப்பு, சண்டை, போட்டி, காதல், பாசம் என்று கலந்து கட்டி அடித்துள்ளார்கள்.

கிரிக்கெட்

சென்னை 600028 படத்துக்குப் பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்துக் கதையமைத்த படங்களில் நிச்சயம் லப்பர் பந்து முக்கியமான படமாக இருக்கும்.

தினேஷ் வரும் போதெல்லாம் விஜயகாந்த் பாடலைப் போட்டுக் கலக்கியுள்ளார்கள். கேப்டன் ரசிகரான தினேஷ் வீடு முழுக்க கேப்டன் படங்கள்.

போட்டியில் மரண அடி அடிக்கும் போது மட்டையைச் சுழற்றி கெத்து காட்டுகிறார், தினேஷ் பெயரும் கெத்து  .

இறுதிப்போட்டி செம பரபரப்பாக உள்ளது. படம் பார்ப்பவர்கள் விளையாட்டரங்கில் பார்ப்பது போல ஆர்ப்பரிக்கிறார்கள். பரபரப்பான போட்டியைப் பார்த்த உணர்வு.

இதில் வரும் ட்விஸ்டை ஊகிக்க முடிந்தாலும், சுவாரசியமாக இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

போட்டியை வர்ணனை செய்பவரும், தினேஷ் நண்பர்கள் பாலாவை கலாய்ப்பதும் அப்படியே கிராமத்துக் குசும்பு.

ஒளிப்பதிவு இசை

ஒளிப்பதிவு செமையாக உள்ளது. எங்கேயுமே செயற்கை உணர்வு வராத அளவுக்கு அற்புதமாக எடுத்துள்ளார்கள்.

போட்டியைக் காண்பவர்கள் எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும், ஆரவாரமான போட்டியாகக் காண்பித்து இருப்பது சிறப்பு.

பாடல்களை முன்பு கேட்கவில்லையென்பதால், எதுவும் கூற முடியவில்லை. பின்னணி இசை சிறப்பாக இருந்தது.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம்.

இறுதியில் எது வெற்றி? என்பதை அழகாகக் கூறியுள்ளார்கள்.

கூற வேண்டிய கருத்தைக் கூறினாலும், இடது சாரி மனநிலையில் படத்தைத் திணிக்காததே பலரும் இப்படத்தை ரசிக்கக் காரணம்.

Directed by Tamizharasan Pachamuthu
Written by Tamizharasan Pachamuthu
Produced by S Lakshman Kumar, A. Venkatesh
Starring Harish Kalyan, Attakathi Dinesh, Swasika, Sanjana Krishnamoorthy
Cinematography Dinesh Purushothaman
Edited by Madan Ganesh
Music by Sean Roldan
Release date 20 September 2024
Country India
Language Tamil

The post லப்பர் பந்து (2024) | மாமா Vs மாப்பிள்ளை appeared first on giriblog.

US Return சாத்தியமா?
அமெரிக்க வாழ்க்கையிலிருந்து விலகித் திரும்ப இந்தியாக்கே வர முடியுமா என்பதை US Return கட்டுரை கூறுகிறது. Image Credit

அமெரிக்கா

பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது நோக்கமாக இருக்கும். அமெரிக்கா ஒரு கனவு தேசம்.

இதற்கு இங்குள்ள மேம்பட்ட வாழ்க்கை, வாய்ப்புகள், கிடைக்கும் அதிக ஊதியம், சிறப்பான உட்கட்டமைப்பு உட்படப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

எனவே, பலரும் இங்கேயே சென்று குடியேற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எனக்கும் அமெரிக்கா ஒருமுறையாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. காரணம், அங்குள்ள உட்கட்டமைப்பு, சாலைகளை, வித்தியாசமான பகுதிகளைக்காண.

தற்போது கால மாற்றத்தில், அமெரிக்காவும் விமர்சனத்துக்குள்ளாகி விட்டது என்றாலும், இக்கட்டுரை அமெரிக்கா சரியா தவறா என்பது பற்றியல்ல, மாறாக அங்கே வசித்தவர்கள் திரும்ப முடியுமா என்பதைப் பற்றி.

US Return

வெளிநாடு சென்று பல காலமாக இருந்தவர்கள், பெரும்பாலும் இந்தியா திரும்ப வர விரும்புவதில்லை. அமெரிக்கா என்றில்லை எந்த வளர்ந்த நாடாக இருந்தாலும்.

அது அமெரிக்கா எனும் போது இன்னும் கடினமாகிறது.

திரும்ப வந்தவர்களும் விசா தொடராதது, பணி மாற்றம் உட்பட வேறு வழியில்லாத காரணங்களாலே! விருப்பப்பட்டு அல்ல.

பணிக்காக அமெரிக்கா சென்று பல காலமாக வாழ்ந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே எனக்குத்தெரிந்து அவர்களாக முடிவெடுத்து இதுவரை திரும்பியுள்ளனர்.

முதல் நபர்

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். தனது மகளின் படிப்புக்காக இந்தியா திரும்பி விட்டார். இது நடந்தது 2016 ஆக இருக்கலாம்.

இரண்டாம் நபர்

தனது பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோருக்கு வயதாகிறது, அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், திரும்பியவர்.

பின்னர், அமெரிக்காவுக்கே திரும்பச் செல்லலாம், தெரியாது.

மூன்றாம் நபர்

2012 ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பியவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். தற்போது இந்தியாவில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவர் தான் இக்கட்டுரை எழுதக்காரணமாக இருந்தவர்.

ஒத்த எண்ண அலைவரிசை

இவர் எனக்கு முன்பு அறிமுகம் கிடையாது, திருமண நிகழ்வில் அறிமுகமானார்.

இருவரும் பரஸ்பரம் விசாரித்த பிறகு இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர் என்றதுடன் எனக்கு ஆர்வமானது.

எதனால் இந்தியா வந்தார்? எப்படி வர முடிந்தது? எப்படி மனைவி ஒத்துக்கொண்டார்? அமெரிக்கக் குடியுரிமை பெற்றும் எப்படி வந்தார்?

என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தேன். அதோடு நானும் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளேன் என்பதாலும், அவர் எண்ண அலைவரிசையை ஒத்து இருந்ததால், அவரும் ஆர்வமாகப் பேசினார்.

நான் செய்த, செய்ய நினைத்தவற்றை அவர் செய்து கொண்டு இருந்ததே உரையாடலின் நேரத்தை அதிகப்படுத்தியது.

அமெரிக்கக் குடியுரிமை

எனக்கு Geo Politics ல் அதிக ஆர்வம் என்பதால், அமெரிக்கா பற்றியும் பல தகவல்களைக் கூறியதால், அவரும் ஆர்வமாகப் பல்வேறு தகவல்களைக் கூறினார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற வேண்டும் என்றால், அங்குள்ள சட்ட திட்டங்களை, அரசியலைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பதால், இதுவரை மற்றவர்கள் கூறாத பல்வேறு தகவல்களைக் கூறினார்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்தியா வந்ததால் வாக்களிக்க முடியாது (OCI) என்ற ஒன்றைத்தவிர அனைத்தையும் செய்ய முடியும்.

திட்டமிடல்

கிட்டத்தட்ட பக்காவாக அனைத்தையும் திட்டமிட்டுச் செய்துள்ளார்.

பெருமைக்காகவும், பணம் உள்ளது என்பதற்காகவும் செலவுகளைச் செய்யாமல் தேவையானவற்றுக்கு மட்டுமே செய்துள்ளார்.

குறிப்பாக எந்த ஒரு சேவையையும் முழுமையாகப் பயன்படுத்தி, அதன் மூலம் எப்படிச் செலவைத் தவிர்க்கலாம் என்பது வரை யோசித்துச் செய்கிறார்.

மற்ற தகவல்கள், தனிப்பட்ட தகவல்களாக, விவரங்களாக இருப்பதால், பொதுவில் கூறுவது (Privacy) சரியல்ல என்பதால் தவிர்க்கிறேன்.

அவர் கூறியதில் மையக்கருத்தை மட்டும் கூறுகிறேன்.

US Return சாத்தியமா?

எளிதல்ல என்பதே உண்மை.

Bye Bye சிங்கப்பூர் கட்டுரையில் கூறியுள்ளதையே அவரும் கிட்டத்தட்ட கூறினார்.

பலருக்கும் இந்தியாக்கும் செல்ல வேண்டும் ஆனால், அமெரிக்கச் சொகுசு வாழ்க்கையையும் விட முடியவில்லை என்ற குழப்பத்திலேயே உள்ளார்கள்.

எனவே, உடலால் அமெரிக்காவிலும் உள்ளத்தால் இந்தியாவிலும் வாழ்கிறார்கள்.

சிக்கல்

இருப்பதிலேயே மிகப்பெரிய பிரச்சனை பெரும்பாலும் ஒப்பீட்டளவில் கணவர்கள் ஒப்புக்கொண்டாலும், மனைவிகள் இந்தியாக்கு திரும்ப ஒப்புக்கொள்வதில்லை.

காரணம், சொந்தக்காரர்கள் தொல்லை, பொறுப்புகள், தனியுரிமை (Privacy) போவது, திருமணம், விழாக்கள் என்று நெருக்கடிகள்.

இந்தியா வந்தால் லஞ்சம், மோசமான உட்கட்டமைப்பு, ஒழுங்கற்ற போக்குவரத்து முறை போன்ற வழக்கமான குற்றச்சாட்டுகள்.

அமெரிக்காவில் கிடைக்கும் ஊதியம் இந்தியாவில் கிடைக்காது.

மேற்கூறியதே, இந்தியா திரும்ப யோசிக்க, மறுக்கும் காரணங்கள்.

வேறு யார் வந்தார்கள்?

‘இந்தியா வந்த பிறகு ஒருநாள் கூட அமெரிக்காவை விட்டு ஏன் வந்தோம் என்று நினைத்ததில்லை‘ என்று கூறினார்.

இவர் வந்ததைப் பார்த்து இவரது நண்பரொருவர் இந்தியாக்கே திரும்பியுள்ளார் ஆனால், ஓரிரு வருடங்கள் சமாளித்தும் முடியாமல், திரும்ப அமெரிக்காவே சென்று விட்டதாகக் கூறினார்.

இது பற்றிக் குறிப்பிடும் போது,

‘இந்தியா செல்வதா? அமெரிக்காவிலேயே இருப்பதா? என்ற குழப்பத்தில் இருப்பவர்கள் இது போன்று வந்து பார்த்து, முடியவில்லை என்றால் திரும்ப அங்கேயே சென்று விடலாம்.

குறைந்த பட்சம் குழப்பத்திலேயே வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஒரு தெளிவாவது கிடைக்கும்.

இது போல வந்து சென்றவர் தற்போது தெளிவாக நம் வாழ்க்கை அமெரிக்கா தான் என்பதை முடிவு செய்து, குழப்பத்திலிருந்து விடுபட்டதாகக் கூறினார்‘.

இவ்வாறு அனைவராலும் வந்து செல்ல முடியாது காரணம், பணிச்சூழல், வயது, திரும்ப அனைத்தையும் மாற்றுவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாகக் குழந்தைகள் படிப்பு.

இது போன்று சிலர் இந்தியா வந்து திரும்ப அமெரிக்காவே சென்று விட்டதாகக் கூறினார்.

முடிவு எடுப்பது

Bye Bye சிங்கப்பூர் கட்டுரையில் கூறி இருந்தது போல, உணர்ச்சிவசப்பட்டு US Return முடிவு செய்ய வேண்டாம்.

சமாளிக்க முடியுமா? இந்திய வாழ்க்கை திரும்பப் பொருந்துமா? குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் தானே வளர்ந்தார்கள் அவர்களால் திரும்ப வர முடியாதா?! என்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனை மற்றவர்களுக்கு வேண்டாம்.

அவ்வாறு நினைப்பவர்கள் பலர் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர்கள் தான். இவர்கள் இன்னொரு நாட்டுக்குச் சென்றுள்ளார்கள், அவ்வளவே.

நகரத்தில் பழகியவர்களால் கிராமத்துக்கு எப்படிச் செல்ல முடிவதில்லையோ, கிராமத்தைப் பார்த்து ஏக்கப்படுகிறார்களோ அதே தான் இவர்களுக்கும்.

இந்தியாக்கே வரலாம்

இது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்காலத்தில் அமெரிக்கா மட்டுமல்லாது மற்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்தியாக்கே திரும்புவார்கள் என்பதே என் கணிப்பு.

காரணம், மேற்கத்திய நாடுகளின் பல்வேறு பொருளாதார, சமூக காரணங்கள். அமெரிக்காவில் Green Card கிடைப்பதும் இனி எளிதல்ல என்ற நிலையுள்ளது.

எங்கே வேண்டும் என்றாலும் வசிக்கலாம் தவறில்லை ஆனால், அங்கே வசிப்பதாலேயே இந்தியாவை இழிவாகப் பேசுவதை மட்டும் செய்ய வேண்டாம்.

கொசுறு

வாழ்க்கையில் ஓரிரு தைரியமான முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதில் இந்தியாவே திரும்ப வேண்டும் என்ற என் முடிவு நான் எடுத்த முடிவுகளில் சிறந்த ஒன்றாக இன்று வரை கருதுகிறேன்.

இன்னொன்று கடனைக்கட்ட வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவு  .

The post US Return சாத்தியமா? appeared first on giriblog.

Adios Amigo (2024 Malayalam) | எதிர்பாரா பயணம்
Road Movie போல ஆனால், கொஞ்சம் மாறுதலுடன் Adios Amigo. Image Credit

Adios Amigo

எதிர்பாராதவிதமாகச் சந்தித்துக்கொள்ளும் இருவரின் பயணம் Adios Amigo.

பயணத்தில் ஆர்வம் கொண்ட ஆசிஃப் அலி, தான் சந்திக்கும் சுராஜை தனது பயணத்தில் இழுத்துக்கொள்கிறார்.

இருவரது பயணத்திலும் (கேரளாவுக்குள்) பல்வேறு அனுபவங்கள். அதைச் சுவாரசியமாகக் கொடுத்துள்ளார்கள்.

பயணம்

Road Movie எனப்படும் பயணக்கதை பலருக்கு விருப்பமானது, பெரும்பாலும் இப்படங்களில் புதுவிதமான அனுபவங்களாக இருக்கும்.

கோபம், சண்டை, த்ரில்லர் என்று அனைத்தும் கலந்து இருக்கும்.

இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. மிகப்பெரிய பணக்கார வீட்டு நபரான ஆசிஃப் அலி சரக்கடித்துக்கொண்டே ஊர் சுற்றுபவர்.

பணக்காரராக இருந்தாலும், அவர் பயன்படுத்துவது பேருந்து, ஆட்டோ, ரயில் போன்ற பொதுத்துறை வாகனங்கள் தான்.

அம்மாவின் மருத்துவச் செலவுக்காக நண்பனிடம் கடன் கேட்டு இருந்த நிலையில், அவர் கூறும் இடத்துக்கு சுராஜ் வருவார். இங்கே தான் இருவரும் சந்திப்பார்கள்.

ஆசிஃப் அலி பணம் வைத்து இருப்பதாலும், உதவும் மனப்பான்மை கொண்டவராக இருப்பதாலும், தனக்கும் உதவுவார் என்ற எண்ணத்தில் அவருடன் பயணிக்கிறார்.

சுராஜுக்கு பணம் தேவையென்றாலும் திருடனல்ல, மனசாட்சியுடன் நடப்பவர்.

ஆசிஃப் அலி பணம் கொடுப்பது போல இருக்கும் ஆனால், ஏதாவது காரணத்தால் முடியாது. இப்படியே சென்று கொண்டு இருக்க, சுராஜுக்கு நெருக்கடியாகும்.

இதன் பிறகு என்ன ஆனது? என்பதே கதை.

குடி

யப்பா! எப்படா குடியை ஆசிஃப் அலி நிறுத்துவார் என்றாகி விட்டது. படத்திலேயே மிகவும் கடுப்பாக இருந்த ஒரே விஷயம் இது தான்.

இவர் குடிப்பதும் இல்லாமல் சுராஜையும் சேர்த்து இழுத்து குடிக்க வைத்து.. உஸ்ஸ் முடியல்ல்ல. என்ன தான் அப்படியான கதாப்பாத்திரம் என்றாலும் ரொம்ப அதிகம்.

ஜாலியான நபர் என்றாலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இப்படி திரிந்து கொண்டு இருப்பாரா?! என்ற சந்தேகத்தை அளிக்கிறது.

அதுவும் குடித்துவிட்டு எங்கே கிடக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு.

பேருந்தில் தன்னை மிரட்டிய நபரை அதே பாணியில் மிரட்டி அவரைக் கலாய்த்து இருப்பது செம  . மிரட்டியவரின் உடல்மொழி சிரிப்பை வரவழைத்தது.

புது வசதியை சுராஜ் அனுபவிக்கும் போது திடீரென்று பறிக்கப்பட்டது போல ஆனதும், அவரின் நடவடிக்கைகள், முக பாவனைகள் சிறப்பு  .

அம்மாக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இப்படிச் சுற்றிக்கொண்டு இருக்க முடியுமா? என்ற கேள்வியும் வருகிறது. அதை  ஆசிஃப்  அலியும் கேட்பார்.

ஒளிப்பதிவு பின்னணி

கேரளாவின் பல இடங்களைச் சுற்றிக்காட்டி விட்டார்கள். அதோடு இதில் பார்த்தால், கேரளா வேறு லெவலில் உள்ளது.

சிங்கப்பூர் போல தாழ் தள பேருந்து (சென்னையிலும் வந்துள்ளது), பயண இடங்கள் என்று எல்லாமே அற்புதமாக உள்ளது.

இசை சிறப்பாகத் தோன்றவில்லை, அதோடு இது ஒளிப்பதிவுக்கான படம்.

யார் பார்க்கலாம்?

பயணக்கதைகளை ரசிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். குடி மட்டுமே எரிச்சலாக உள்ளது.

ஆகச்சிறந்த படமில்லை ஆனால், புது அனுபவமாகவும், பலரின் மன எண்ணவோட்டங்களையும், உதவும் குணத்தையும் காண வாய்ப்பாகவும் இருக்கும்.

சிலர் காட்சியிலேயே இல்லை, தொலைபேசியிலேயே துவக்கத்திலிருந்து இறுதி வரை வந்து சென்றாலும் அவர்களின் அனுசரணை தெரியும்.

இறுதிக்காட்சி உணர்ச்சிகரமாகவும், எதிர்பாராததாகவும் இருந்தது. வழக்கமான படங்களிலிருந்து மாறுதலாக Adios Amigo இருக்கும்.

பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன். NETFLIX ல் காணலாம்.

Directed by Nahas Nazar
Written by Thankam
Produced by Ashiq Usman
Starring Asif Ali, Suraj Venjaramoodu
Cinematography Jimshi Khalid
Edited by Nishadh Yusuf
Music by
Songs Gopi Sundar, Jakes Bejoy
Score Jakes Bejoy,
Release date 9 August 2024
Country India
Language Malayalam

The post Adios Amigo (2024 Malayalam) | எதிர்பாரா பயணம் appeared first on giriblog.

சுதந்திரம் என்றால் என்ன?
அரவிந்தசாமியுடனான கோபியின் நேர்முகத்தில், அரவிந்தசாமி கூறிய சுதந்திரம் குறித்த கட்டுரையே இது. Image Credit

சுதந்திரம்

சுதந்திரத்துக்கான அளவுகோல் கிடையாது, நபருக்கு நபர் மாறுபடும்.

பணம் இருந்தால், பெரிய வீடு, விலையுயர்ந்த தொலைப்பேசி, வாகனம் இருந்தால், வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்தால், கடன் இல்லையென்றால் என்று ஒவ்வொருவருக்கான அளவுகோல் மாறிக்கொண்டே இருக்கும்.

இவையல்லாமல், மற்றவர்களைப் பார்த்து அதே போல இருக்க, வாழ நினைப்பவர்களுக்கு அதுவொரு சுதந்திரம்.

நினைத்ததை வாங்குவது, எந்தச் செலவு செய்ய வேண்டும் என்றாலும் பணம் தயாராக இருப்பது, நினைத்ததைச் செய்ய முடிவது சுதந்திரம் என்கிறார்கள்.

அரவிந்தசாமி

அரவிந்தசாமி இதுகுறித்த அவருடைய எண்ணத்தைக் கூறியது சிறப்பாக இருந்தது.

மற்றவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைப்பதற்காகச் செலவுகளைச் செய்வது சுதந்திரம் அல்ல மாறாகத் தேவையுள்ளது, பொருளாதார ரீதியாக அதைச் செய்ய முடியும் என்றால் செய்யலாம்.

சுருக்கமாக, விலை உயர்ந்தது மற்றும் மற்றவர்கள் நம்மை உயர்வாக எண்ண வேண்டும் என்பது என்றும் சுதந்திரமாகாது என்பதைக்கூறினார்.

இவர் கூறியது ஏற்புடையதாக இருந்ததாலே இக்கட்டுரை.

ஆசைகள்

என் 20’s வயதுகளில் விலையுயர்ந்த சட்டை எடுத்துள்ளேன், அதே போலப் பாண்டிபஜாரில் உள்ள தெருவோர கடையிலும் எடுத்துள்ளேன்.

ஆனால், எதுவுமே மற்றவர்களுக்காக இல்லை, எனக்குப்பிடித்தது வாங்கினேன் என்பதாகவே இருந்தது, என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.

தற்போது எதற்கு விலையுயர்ந்த உடை எடுக்க வேண்டும்? வீண் தானே என்று தோன்றி தவிர்த்து விடுகிறேன், காரணம், அனுபவம். இதுவும் மற்றவர்களுக்காக எடுத்த முடிவல்ல, எனக்கே தோன்றி மாற்றிக்கொண்டது.

பலருக்கும் பல்வேறு கனவுகள், விருப்பங்கள் இருக்கும், தவறில்லை.

எனக்குப் பெரியளவில் ஆசைகளே இல்லை. அரவிந்தசாமி கூறிய பிறகே யோசித்துப்பார்த்தேன், ஆமா! எனக்கு என்ன ஆசை என்று!  .

ஊருக்கு (கோபி) செல்ல வேண்டும், அங்கேயே வாழ்க்கையைத் தொடர வேண்டும். எனக்கு இருக்கும் ஒரே மிகப்பெரிய ஆசை இது மட்டும் தான்.

மற்றபடி மற்ற பாடல் கேட்பது, நண்பர்களுடன் பேசுவது, பெரிய தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பது, வடமாநிலங்கள் பயணிப்பது என்ற ஆசைகள் தான்.

மேற்கூறியவை பல தற்போதே நடந்து கொண்டு இருப்பது தான். எனவே, இவை பிரச்சனைகள் இல்லாமல் தொடர்ந்தாலே மிகப்பெரிய சுதந்திரமாகக் கருதுவேன்.

எல்லை இல்லை

பலரும் சுதந்திரமாக இருக்க எண்ணி ஆசையைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அரவிந்தசாமி கூறியது போல, அவர்கள் வைத்த பொறியில் (TRAP) அவர்களே மாட்டிக்கொள்கிறார்கள்.

இறுதியில் என்ன சாதித்தார்கள் என்று பார்த்தால், நினைத்ததை அடைய வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டு இருந்து இருப்பார்கள்.

பொறியில் சிக்கி இழந்ததை, இழக்கப்போவதை அறியாமல் சுதந்திரமாக இருப்பதாகக் கற்பனையில் இருப்பார்கள். இதன் பெயர் சுதந்திரம் அல்ல.

இறுதியில் அனுபவிக்கவும் முடியாமல், சுதந்திரத்தையும் தொலைத்து இருப்பார்கள்.

சுதந்திரம் என்பது மற்றவர்களுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தனக்கு எது சரி, பொருத்தம், தேவை, முடியும் என்பதைப் பொறுத்துத் தொடர்வதாகும்.

வாய்ப்புக்கிடைத்தால் அரவிந்தசாமி நேர்முகம் பாருங்கள். இதோடு பல்வேறு கருத்துகளையும் கூறி இருந்தார், எதார்த்தமாக இருந்தது.

The post சுதந்திரம் என்றால் என்ன? appeared first on giriblog.

அதிகரிக்கும் அடிப்படைவாத முஸ்லிம்கள்
உலகம் முழுக்க அடிப்படைவாத முஸ்லிம்கள் (Fundamentalist) அதிகரித்துக்கொண்டு செல்கின்றனர். இது பற்றிக் காண்போம். Image Credit

அடிப்படைவாத முஸ்லிம்கள்

இஸ்லாத்தில் பழமையான வழக்கங்களை, கட்டுப்பாடுகளை, கருத்துகளை, சட்ட திட்டங்களை முன்வைப்பவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் என்று கூறுகின்றனர்.

முஸ்லீம் அல்லாதோர் காஃபிர்கள் என்று கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். அதோடு தங்கள் மத வழக்கங்களை மற்றவர்கள் மீது திணிப்பவர்கள், மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.

மதம் மாற்றம் செய்வதில் தீவிரம் காட்டுபவர்கள்.

தமிழகம்

தமிழகத்தில் 2000 ஆண்டு வாக்கில் அடிப்படைவாத முஸ்லிம்கள் இல்லை அல்லது மிக மிகச்சிறு அளவில் இருந்தனர்.

சவூதி செல்பவர்கள் எண்ணிக்கை 90’s க்கு பிறகு அதிகரித்ததில், அங்கே வாழ்ந்து இங்கே வந்தவர்கள், இங்கேயும் மத கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் துவங்கினர்.

சவூதி அரசு இந்தியாவில் அடிப்படைவாதத்தைக் கொண்டு செல்லத் துவக்கத்தில் நடவடிக்கை எடுத்தது (கூகுளில் தேடினால் விரிவாக கிடைக்கும்).

அப்போது தீவிரமடைந்தது தான் வஹாபியிசம். முன்னர் இல்லாத பழக்க வழக்கங்கள் தற்போது தமிழகத்தில் பரவலாகிவிட்டது, ஆக்கப்பட்டு வருகிறது.

அடிப்படைவாதம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டாலும் ஒப்பீட்டளவில் வடமாநிலங்களை விடத் தமிழகத்தில் குறைவு.

உலக நாடுகள்

தற்போது நடைபெற்று வரும் அகதிகள் வருகையால் மேற்கத்திய நாடுகள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றன குறிப்பாக ஐரோப்பா நாடுகள்.

மத்தியக் கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறை வேறு, ஐரோப்பாவில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறை வேறு.

இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக அல்லது சட்ட ரீதியாகச் சென்றால், அந்த நாட்டில் என்ன சட்டம் உள்ளதோ அதைத்தான் பின்பற்ற வேண்டும்.

ஆனால், துவக்கத்தில் அமைதியாக இருப்பவர்கள், இவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு கட்டுப்பாட்டைத் தங்கள் பொறுப்பில் எடுக்க விரும்புகிறார்கள்.

விரைவில் ஷரியா சட்டத்தைக் கொண்டு வருவோம், இந்நாட்டைக் கைப்பற்றுவோம் என்று, அடைக்கலம் சென்ற நாட்டையே கைப்பற்ற முயல்கிறார்கள்.

புர்கா அணியாத ஸ்வீடன் நாட்டுப்பெண்ணை அகதியாக வந்த முஸ்லிம்கள் துன்புறுத்தியதால், அவர் அழுது கொண்டே பேசியது வைரலானது.

அண்டை நாடுகள்

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகள் அடிப்படைவாதிகளால் ஆட்சி செய்யப்படுகிறது.

ஷேக் ஹசீனா இருந்தவரை இவர்களை அனுமதிக்காமல் இருந்தார், இவருக்குப் பின் அடிப்படைவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு வங்கதேசம் சென்று விட்டது.

பாகிஸ்தான் இவர்களால் ஆட்சி செய்யப்படவில்லை என்றாலும், அந்நாட்டு மக்களிடையே அடிப்படைவாதமே மேலோங்கியுள்ளது.

அடிப்படைவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளைக் கவனித்தால், அந்த நாடுகளில் கலவரம், அடக்குமுறை என்று எப்போதும் அமைதியற்றதாகவே இருக்கும்.

இதெல்லாம் கண்முன்னே இருக்கும் எடுத்துக்காட்டுகள் அதிலும் குறிப்பாக ஷேக் ஹசீனா மாறி அடிப்படைவாதிகள் கட்டுப்பாட்டில் வந்த பிறகு உள்ள வங்கதேசம்.

இவர்களை அனுமதிக்காத கஜகஸ்தான் போன்ற நாடுகள் அமைதியாக உள்ளன.

அதிகரிக்கும் எண்ணிக்கை

அடிப்படைவாதிகளுக்கு, தீவிரவாதிகளுக்கு நிதி, அடைக்கலம் கொடுத்து அவர்களை ஊக்குவித்து வரும் நாடுகளில் ஒன்று கத்தார்.

உலக நாடுகள் முழுவதிலும் அடிப்படைவாதிகள் தங்கள் கருத்துகளைக் கொண்டு சென்றுள்ளார்கள், மத ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்

இந்தியாவிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியான பரப்புரையால், இளைஞர்களை மூளைச்சலவை செய்கின்றனர்.

பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலி ஆதார் அட்டைகளை உருவாக்கிக் கொடுத்து, அவர்களை இந்திய மாநிலங்களில் நுழைத்து வருகிறார்கள்.

இவர்கள் பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெற்று சர்ச்சையாகும் போது சிறுபான்மையினர், அப்பாவிகள் போர்வையில் ஒளிந்து கொள்கிறார்கள்.

அடிப்படைவாத முஸ்லீம்கள் எதார்த்தத்தோடு இணையாதவர்கள், இதனாலையே உலகளவில் மற்ற சமூகத்தினரோடு இவர்களால் ஒத்துப்போக முடியவில்லை.

நிம்மதியைத் தொலைக்கும்

முஸ்லீம் நாடுகளைப் போல இந்தியாவிலும் ஷரியா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

அரசியல் கட்சிகளும் வாக்கு அரசியலுக்காக இவர்களை ஆதரித்துப் பேசி வருவதால், இவர்களின் வளர்ச்சி, பலம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியக்காரணம், பல்வேறு வகைகளில் இவர்களுக்குக் கிடைக்கும் நிதி, வாக்கரசியல்.

இவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அரசியல்வாதிகள் கொண்டு சென்று விட்டனர். அடிப்படை வாதத்தைக் கட்டுப்படுத்துவது கைமீறிச் சென்று விட்டது.

எங்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் அதிகரிக்கின்றனரோ அங்கே மத ரீதியான பிரச்சனைகள் ஏற்படும், அப்பகுதி நிம்மதியைத் தொலைக்கும்.

இந்தியாவும் இந்த நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டுள்ளது.

The post அதிகரிக்கும் அடிப்படைவாத முஸ்லிம்கள் appeared first on giriblog.

பங்குச்சந்தை பாதுகாப்பானதா?
பங்குச்சந்தை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இது பாதுகாப்பானதா என்பதைப் பற்றிக் காண்போம். Image Credit

ஏற்கனவே, பங்குச்சந்தை என்றால் என்ன? என்பதைப் பற்றிக் கூறியுள்ளேன். எனவே, அறிமுகம் தேவைப்படுகிறவர்கள் இதைப்படித்த பிறகு இக்கட்டுரையைப் படிக்கவும்.

பங்குச்சந்தை பாதுகாப்பானதா?

பங்குச்சந்தை பற்றிய என்ன விளம்பரங்களைக் கண்டாலும், அதில் சந்தை அபாயங்களுக்குட்பட்டது என்ற வாசகம் இடம் பெற்று இருக்கும்.

காரணம், சிறு தவறு கூட நமது சேமிப்பு மொத்தத்தையும் இழக்க வைத்து விடும்.

உலகம் முழுக்க பங்குச்சந்தை செயல்பட்டு வந்தாலும், இந்தியாவில் கடந்த 2021 ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சிறு சேமிப்புக்கான வட்டி குறைந்து வருவதால், மக்கள் அதிகம் இலாபம் கிடைக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். Demat கணக்கு துவங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எண்ணிக்கை அதிகரிக்கும் போது இலாபமும் அதிகரிக்கும் ஆனால், அதே ஏதாவது சொதப்பினால் பெரிய நட்டத்தில் கொண்டு வந்து விட்டு விடும்.

இலாபம்

தற்போதைய சூழ்நிலையில் சேமிப்புத் திட்டங்களில் 7% வட்டி தோராயமாகக் கிடைக்கும் நேரத்தில் பங்குச்சந்தையில் 13% தாண்டியும் கிடைக்கிறது.

சில நேரங்களில் 20% தாண்டியும் செல்கிறது.

எனவே, பல காலமாக முதலீடு செய்து வந்தவர்களுக்கு அபரிமிதமான இலாபத்தைப் பங்குச்சந்தை அளித்துள்ளது என்றால் மிகையில்லை.

குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஷேரில் முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் ஃபண்ட் வழியாக மாதாமாதம் (SIP) செய்யும் முதலீடு எளிதாக இருப்பதால், அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

தனிப்பட்ட முறையில் எனக்கு அதிக இலாபத்தைத் தந்துள்ளது.

பாதுகாப்பானதா?

பாதுகாப்பானது என்று யாராலும் கூறவே முடியாது காரணம், உலக நடப்புகளைப் பொறுத்து ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால், இறக்கம் இருந்தாலும் ஏற்றம் அதிகம் இருந்து கொண்டே இருப்பதாலே, இதற்கான வரவேற்பும் அதிகமாக உள்ளது.

எனக்கான இலாபம் 22% இருந்த போது கொரோனா காலத்தில் 2% க்கு வந்து விட்டது. முதலுக்கு நட்டமில்லை என்றாலும், மிகப்பெரிய இழப்பு.

இச்சேமிப்பு நீண்டகாலம் சேமிப்பாக இருந்ததாலும், எனக்குத் தேவைகள் இல்லாததாலும் அப்படியே தொடர்ந்து வந்தேன், பின்னர் மீண்டு விட்டது.

உலகப்பொருளாதாரம்

பங்குச்சந்தை என்பது இந்தியா வளர்ச்சியை மட்டும் வைத்தல்ல, உலகளவில் ஏற்படும் மாற்றங்களும் பங்கு மாற்றத்தில் முக்கியப்பங்கை வகிக்கும்.

அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஒரு அறிவிப்பு, இந்தியாவின் பங்குச்சந்தையை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

Recession என்று அறிவிக்கப்பட்டால், இந்தியப் பங்குச்சந்தை அதலபாதாளத்துக்குச் செல்லும். காரணம், அனைத்துமே சங்கிலி பிணைப்பாக உள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டால், அங்குள்ள நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போது அதைச்சார்ந்துள்ள இந்திய நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, இப்பிரச்சனை உலகளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதால் பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும்.

யாருக்கு அதிகப் பாதிப்பு?

தங்களுடைய மொத்தச் சேமிப்பையும் இதிலேயே வைப்பவர்களுக்கு, இதை மட்டுமே நம்பிக்கொண்டு உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது.

அதோடு நீண்டகால முதலீடாக இல்லாமல் குறுகிய காலத்தில் அதிக முதலீடு செய்பவர்களுக்கு, மேற்கூறிய சரிவு ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

அதிக இலாபம் கிடைப்பதால் மொத்தச் சேமிப்பையும் இதிலேயே முதலீடு செய்து, ஒருவேளை உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையால் (Recession, War) மிகப்பெரிய சரிவு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாது.

இதை நிச்சயம் பயமுறுத்தக் கூறவில்லை ஆனால், இலாபம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காகவே இதை ஒன்றை மட்டுமே நம்ப வேண்டாம் என்று கூறுகிறேன்.

என்ன செய்வது?

பங்குச்சந்தையாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும், ஒரே இடத்தில் அனைத்துச் சேமிப்பையும், முதலீட்டையும் முடக்கக் கூடாது.

நிலம், PPF, PF, FD, SGB, NPS, தங்கம், Superannuation, சிறு சேமிப்புத் திட்டங்கள் உட்படப் பல்வேறு திட்டங்களில் பிரித்துச் சேமிப்பைத் தொடர வேண்டும்.

உலகளவில் அனைத்து அரசாங்கங்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றன. எனவே, மிக நெருக்கடியான சூழ்நிலையில் வங்கி தொடர்பாக உள்ளவை பிரச்சனையாக வாய்ப்புகள் உள்ளது.

ஒருவேளை அப்படியொரு தவிர்க்க முடியாத மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் நிலம், தங்கம் (Physical asset) வைத்து இருந்தால், பாதுகாப்பு கொடுக்கலாம்.

பங்குச்சந்தையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அடுத்த சில வருடங்களில் மீண்டெழ ஏராளமான வாய்ப்புகள் உள்ளது, கொரோனாவுக்குப் பிறகு நடந்து போல.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் தாங்கக்கூடிய அளவுக்கு நம் பொருளாதாரம் இல்லையென்றால், மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

The post பங்குச்சந்தை பாதுகாப்பானதா? appeared first on giriblog.

கூழாங்கல் (2021) | இயல்புக்கு அருகில்
திரையரங்கில் வெளியாகாமல் உலகத்திரை விழாக்களில் பங்கு பெற்று விருதுகளைக் குவித்து, OTT யில் வெளியான படம் கூழாங்கல். Image Credit

கூழாங்கல்

பெற்றோர் வீடு சென்ற மனைவியை, அழைத்து வர மகனுடன் செல்கிறான் குடிகார கணவன். மனைவி வந்தாரா? என்ன நடந்தது? என்பதே கூழாங்கல்.

கலைப்படம்

படத்தின் துவக்கமே கூறி விடுகிறது இதுவொரு கலைப்படம் என்று.

ஒரு குடும்பத்தின் அல்லது சிலரின் வாழ்க்கையை எந்தத் திரைப்பூச்சும் இல்லாமல், எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களுக்கென்று ஒரு மொழி, வகை உள்ளது. அது எதார்த்தம் கிடையாது, அவ்வாறு பெரும்பாலானவர்களுக்கு நடப்பதில்லை.

எப்போதுமே திரைப்படங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து எதோ ஒரு வகையில் விலகி இருக்கும். தற்போது வரும் படங்கள் சில குறிப்பாக மலையாளப்படங்கள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன.

வறட்சி

சமீப காலத்தில் இப்படியொரு வறட்சியான பகுதியை எந்தப்படத்திலும் காணவில்லை. வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி.

படம் பார்க்கும் நமக்கே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றி விடும் போல.

இறுதியில் இந்த வறட்சியையும் முக்கிய பகுதியாகக் காண்பித்துள்ளார் இயக்குநர். இயக்குநர் வினோத் மதுரை பகுதியைச் சார்ந்தவர் என்பதால், இப்பகுதியைக் கதைக்குத் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

என்ன தான் கலைப்படம் என்றே தெரிந்து தான் பார்க்கிறோம் என்றாலும், இந்த அளவுக்கு இயல்பாக எடுக்க வேண்டுமா?! என்று தோன்றுகிறது.

நடந்து செல்வதையே 10 / 20 நிமிடங்கள் காண்பித்தால் எப்படி?! படம் முழுக்க இது போன்ற காட்சிகளே அதிகம்.

சபாபதி

‘சபாபதி’ என்ற படத்தில் TR ராமச்சந்திரன் பணக்கார வீட்டுப்பையனாகவும், மாணவனாகவும் நடித்து இருப்பார்.

ராமச்சந்திரனிடம் ‘செங்கல்பட்டிலிருந்து ரயில் ஒரு இடத்துக்குப் போவதைக் கட்டுரையாக எழுது‘ என்பது போல ஆசிரியர் ஒரு இடத்தைக் கூறுவார்.

அதற்கு ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பி குப் குப் குப் என்று போனது என்பதையே பக்கங்களாக ராமச்சந்திரன் எழுதி வைத்து இருப்பார்.

அதாவது விடையாக ‘குப் குப் குப் குப்‘ மட்டும் இருக்கும்  .

அது போலக் கூழாங்கல் படத்தில் பாதிக்கும் மேல் நடப்பது உள்ளது அல்லது எங்காவது வெறித்துப் பார்ப்பது இருக்கிறது.

என்ன தான் கலைப்படம் என்றாலும் நடப்பதையே பெரும்பகுதி காண்பித்துக்கொண்டு இருப்பது நியாயமா?

கதாபாத்திரங்கள்

நடித்தவர்கள் அனைவருமே நடிகர்களா அல்லது அங்கே உள்ளவர்களையே நடிக்க வைத்து விட்டார்களா? என்று தெரியவில்லை.

ரொம்ப இயல்பாக உள்ளார்கள். குறிப்பாக அப்பாவும் பையனும். இப்படத்தில் வசனங்கள் குறைவு.

நடித்துள்ளவர்கள் அனைவருமே நாம் கண்ட, எதிர் கொண்ட, கேள்விப்பட்ட, சந்தித்த எதோ ஒரு நபரை நினைவுபடுத்துகிறார்கள்.

யுவன் இசைக்கு வேலையில்லை, வறட்சியை ஒளிப்பதிவு அப்பட்டமாகக் காண்பித்துள்ளது. நாமே அந்த இடத்தில் இருப்பது போலவே உள்ளது.

யார் பார்க்கலாம்?

இது பொழுதுபோக்கு படமல்ல. எனவே, கலைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது .

இதுவொரு திரைப்படம் என்பதை விடச் சம்பவங்களைக் காட்சிப்படுத்தியதாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முன்னரே என்ன மாதிரியான படம் என்று தெரிந்து இருந்தாலும், இவ்வளவு இழுவையாகக் கொண்டு செல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.

படம் மெதுவாகச் செல்வது பிரச்சனையில்லை ஆனால், எதுவுமே இல்லாமல் செல்வது தான் அயர்ச்சியைத் தருகிறது.

படத்தைத் தயாரித்தவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

SONYLiv ல் காணலாம்.

Directed by P. S. Vinothraj
Screenplay by P. S. Vinothraj, Vignesh Kumulai
Produced by Vignesh Shivan, Nayanthara
Starring Chellapandi, Karuththadaiyaan
Cinematography Vignesh Kumulai, Jeya Parthipan
Edited by Ganesh Siva
Music by Yuvan Shankar Raja
Release date 4 February 2021 (Rotterdam)
Running time 75 minutes
Country India
Language Tamil

The post கூழாங்கல் (2021) | இயல்புக்கு அருகில் appeared first on giriblog.

நீ வருவாய் என நான் இருந்தேன் | கல்யாணி மேனன்
70‘s / 80s இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘நீ வருவாய் என’. இப்பாடலை பாடிய பாடகி கல்யாணி மேனனை பற்றிய கட்டுரை. Image Credit

நீ வருவாய் என

விஜயன், சரிதா நடித்து 1980 ம் ஆண்டில் வெளியான ‘சுஜாதா’ என்ற திரைப்படத்தில் வந்த ‘நீ வருவாய் என‘ பாடல் பலரையும் கவர்ந்தது.

MS விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துக் காலம் கடந்தும் பலரால் ரசிக்கும் பாடலாக உள்ளது. அடிக்கடி கேட்கும் என் விருப்ப பட்டியலில் உள்ள ஒரு பாடல்.

இது போன்ற இன்னொரு பாடல் ‘நானே நானா யாரோ தானா‘.

YouTube நேர்முகம்

குட்டி பத்மினி YouTube நேர்முகத்தில் இயக்குநர் சுந்தர்ராஜன் இப்பாடலைப் பற்றியும், இப்பாடலைப் பாடிய பாடகி கல்யாணி மேனனை பற்றியும் கூறினார்.

ஒரு படத்தின் பாடலுக்காக நீ வருவாய் எனப் பாடலைப்பாடிய பாடகியைப் பாட வைக்க, MS விஸ்வநாதன் அவர்களிடம் சுந்தர்ராஜன் கேட்டுள்ளார்.

அப்போது நடந்த சம்பவத்தை MS விஸ்வநாதன் கூறியுள்ளார்.

கல்யாணி மேனன்

கல்யாணி மேனன் ஒரு மேடைப்பாடகி.

இவர் பாடும் இடத்துக்கெல்லாம் ஒரு நபர் சென்று அவரது பாடலை ரசிப்பதும், முன் வரிசையில் அமர்வதும், ஆட்டோஃகிராப் வாங்குவதும் வழக்கம்.

நாளடைவில் காதலாகி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

திருமணம் ஆன பிறகு இவரது கணவர் இவர் திரை துறையில் பாட பல இசையமைப்பாளர்களைச் சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

டெல்லி

இருவரும் மத்திய அரசின் வேலையிலிருந்துள்ளார்கள், கணவருக்கு டெல்லிக்கு மாற்றல் வந்து அவர் டெல்லி சென்று விட்டார்.

இருப்பினும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆனது? வாய்ப்பு கிடைத்ததா? என்று கேட்பது வழக்கம்.

அப்படிக் கேட்ட ஒரு நாள், ‘MS விஸ்வநாதன் அழைத்துள்ளார் நாளைக்குச் செல்ல வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு மகிழ்ந்த கணவர், ஒலிப்பதிவு துவங்குவதற்கு முன் வந்து விடுகிறேன் என்று கூறி, எப்படியோ விமானத்தில் பயணச்சீட்டை வாங்கி விட்டார்.

காத்திருப்பு

அடுத்த நாள் கல்யாணி மேனனும் கணவர் வருவதற்காகக் காத்திருக்கிறார் ஆனால், நேரமாகிறது வரவில்லை.

பாடல் பதிவு துவங்க வேண்டும் என்பதால் சமாதானம் கூறி, தானும் உன் அப்பா போலத்தான், தன்னிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பாடலைப் பாட கூறியுள்ளார் MS விஸ்வநாதன் அவர்கள்.

இவரும் அரைகுறை மனதோடு கணவர் வரவில்லையே என்று பாட, பாடலின் வரிகளும் அதற்கேற்றாப்போல இருந்ததால், அதே ஏக்கத்துடன் பாடியுள்ளார்.

ஆனால், விமானநிலையத்துக்குச் சென்ற காரை வேகமாக ஓட்டக் கூறிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் கணவர் இறந்து விடுகிறார்.

இதனால், இதன் பிறகு இவர் பாடுவதையே நிறுத்தி விட்டார் என்று MS விஸ்வநாதன் அவர்கள் கூறியதை சுந்தர்ராஜன் கூறினார்.

இவ்வளவு காலமும் நாம் ரசித்த பாடலுக்குப் பின்னே இப்படியொரு சோகம் உள்ளதா? என்று மிக வருத்தமாக இருந்தது  .

விக்கிபீடியா

இதன் பிறகு இதற்காக இணையத்தில் தேடிப்பார்த்தேன் .

கல்யாணி மேனன் முதல் பாடல் ‘நல்லதொரு குடும்பம்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் (1979) பாடியுள்ளார்.

இரண்டாவது பாடல் தான் 1980 ல் பாடிய ‘நீ வருவாய் என’.

இதன் பிறகு நான்கு வருடங்கள் அவர் பாடவில்லை. இடைப்பட்ட காலத்தில் தான் சுந்தர்ராஜன் கூறிய சம்பவம் நடந்து இருக்க வேண்டும்.

அதாவது, இந்த நான்கு வருட இடைவெளியில் தான் இவரைப் பாடவைக்க சுந்தர்ராஜன் கேட்டு இருக்க வேண்டும்.

1980 க்கு பிறகு திரும்ப இளையராஜா இசையில் 1984 ல் பாடியுள்ளார்.

ரகுமான்

அதன் பிறகு 10 வருட இடைவெளிக்குப் பிறகு ரகுமான் இசையில் ‘புதிய மன்னர்கள்’ படத்துக்காக 1994 ல் பாடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து காதலன், அலைபாயுதே, முத்து என ரகுமான் இசையில் பல பாடல்களைப்பாடியுள்ளார்.

இறுதிப்பாடலாக ’96’ படத்தில் (2018) ‘காதலே காதலே’ பாடலைப்பாடியுள்ளார்.

தனது 80 வது வயதில் 2021 ம் ஆண்டு காலமாகியுள்ளார்.

செய்திகளைத் தேடிப் படித்ததில் கிடைத்த இன்னொரு (இன்ப) அதிர்ச்சி இவருடைய மகன் தான் ஒளிப்பதிவாளர், இயக்குநர் ராஜிவ் மேனன் என்பது  .

எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தனது மகனை எப்படி கொண்டு வந்துள்ளார் பாருங்கள்! Great .

The post நீ வருவாய் என நான் இருந்தேன் | கல்யாணி மேனன் appeared first on giriblog.